காரைக்குடியில் பரபரப்பு.. அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதிமுக பிரமுகரான இவர் அக்கட்சியின் முன்னாள் வட்ட செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் திரைச்சீலை எரிந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டின் முன் பகுதியில் கருகிய நிலையில் இருந்தது.

என்ன சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb attack in Karaikudi ADMK Admin house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->