#Breaking || ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!! வெளியான பகீர் பின்னணி!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் முதலாவது கேட் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் மாளிகை சுற்றிலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

அவரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த விசாரணை செய்ததில் தேனாம்பேட்டையை சேர்ந்த வினோத் என்ற கருக்கா வினோத் என்பது தெரிய வந்துள்ளது.

இவர் கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்த நிலையில் அவர் முன்கூட்டியே விடுதலையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய ஒரு கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் பெட்ரோல் குண்டு வீசும் போது ஆளுநரே வெளியேறு என கோஷமிட்டுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. பிடிப்பட்ட கருக்கா வினாத்திடமிருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவலும் வெளியாகி உள்ளது. இவர் கடந்த 2022ம் ஆண்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். 

மேலும் கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என அப்போது வாக்குமூலம் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அண்ணாமலை உடன் பேசிய தொலைபேசி உரையாடலையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ மற்றும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆளுநர் மாளிகை முற்றிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb attack on Governor house sensational background


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->