தி.மலையில் மீண்டும் பரபரப்பு... திமுக நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் திமுக நிர்வாகியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் நகர திமுகவின் மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளராக சங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு பண பரிமாற்றத்தில் பல நபர்களிடம் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த காரின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். 

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை நகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதில் இரண்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை சேகரித்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலை நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb hurled at DMK executive car in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->