தஞ்சாவூர் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்த கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சக்கரபாணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகர செயலாளர் இருந்து வருகிறார். இவருடன் அவரது மனைவி மாலதி மற்றும் மகன் இனியன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே வெடி சத்தம் கேட்டதால் சக்கரபாணி எழுந்து வந்து வாசலில் பார்த்துள்ளார். அப்பொழுது பெட்ரோல் நிரம்பி இருந்த பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில் எறிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சக்கரபாணி வீட்டிற்கு முன் குவிந்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி ப்ரியா மற்றும் ஏடிஎஸ்பி சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb hurled at Thanjavur Hindu Front executive house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->