பெட்ரோல் விலையை ஏன் ஏற்றினோம்? கர்நாடக முதல்வரின் அடேங்கப்பா விளக்கம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் ஆளக்கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு, மாநிலத்தின் வருவாய் அதிகப்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் காண விற்பனை வரியை 18 முதல் 29 சதவீதம் உயர்த்தி உள்ளது. 

இது கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 50 பைசாவும் உயர்ந்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கர்நாடக மாநிலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களின் உயரம் விளையும் உயரும் என்பதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

மேலும், இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்போர், இருசக்கர வாகனத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர், இந்த பெட்ரோல் விலை உயர்வால் கலக்கமடைந்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில், அதனை தற்போது காங்கிரஸ் உயர்த்தி உள்ளது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காத நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் வகையில் இந்த விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாகவும் பாஜகவினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் சித்ராம்மை புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தின் அடிப்படை பொது சேவைகளுக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் நிதி தேவைப்படுவதால், இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை ஏற்றத்துக்குப் பின்னரும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைவாகவே உள்ளதாகவும் அவர் புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

மேலும் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு வரிகளை உயர்த்தி விட்டதாகவும், தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான எங்களுடைய அரசு நிர்வாகத்தை பொறுப்பாக நடத்தி வருவதாகவும், மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்பாடாத வகையில் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சித்தராமையா அம்மாநில மக்கள் வியக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை கேட்டால் தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்த முதல் வருடம் முழுவதும் எப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பீர்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டு கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அமைச்சர் கொடுத்தல் பதில் "திமுகவின் தேர்தல் அறிக்கையில் தேதி போடவில்லை. விரைவில் குறைப்போம்" என்று சொன்னதுதான் நினைவுக்கு வருவதாக தமிழக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol Diesel rate Karnataka 2024 Congress DMK TN


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->