மக்களே உஷார்... கிடுகிடுவென உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!  - Seithipunal
Seithipunal


கோவை, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகிய நீலகேரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக பில்லூர் அனைத்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணையின் முழு கொள்ளளவான நூறு அடியில் தற்போது 98 அடி நீர் இருப்பு உள்ளது, இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றங்கரையோர கிராமங்களான தேக்கம்பட்டி, பாலப்பட்டி, சிறுமுனை, ஆலங்கொம்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

மேலும் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pillur dam water level high


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->