பெண்களுக்கு உதவும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கல் திட்டம்.... பயன்களைக் காண்போமா?
pink Auto scheme to help women we will see the benefits
சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் தமிழக அரசால் விரைவில் செயல்படுத்த உள்ளன.
இத்திட்டத்தின் அறிவிப்பானது, கடந்த வருடம் 22 ஆம் தேதி அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
அதைத்தொடர்ந்து இன்று, இளஞ்சிவிப்பு ஆட்டோக்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தைப் பெண்கள் மட்டும் தான் பெற்றுக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோவில் அம்சங்கள்:
இத்திட்டத்தின் தகவலாக, இளஞ்சிவிப்பு ஆட்டோவில் பெண்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை உதவி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி உடனுக்குடன் விரைந்து செல்ல ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 250 பெண்களுக்குச் சி.என். ஜி அல்லது ஹைப்ரிட் ஆட்டோ வாங்க தல ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு உள்ளது. பெண்களுக்குப் பணப் பற்றாக்குறைவு காரணமாக, ஆட்டோ வாங்க தேவைப்படும் எஞ்சிய பணத்திற்காக வங்கிகளுடன் இத்திட்டமானது விரைவில் இணைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன.
அரசு அறிவிப்பு:
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முழுமையாகப் பெண்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே செயல்படுத்த உள்ளனத் தமிழக அரசு. இன்னும் ஒரு மாத காலங்களில் எல்லா வசதியும் கொண்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தீர்மானமாக தெரிவித்துள்ளன.
English Summary
pink Auto scheme to help women we will see the benefits