விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி! தடுமாற்றத்துடன் கீழே இறங்கிய விமானம்! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் மர்ம நபர் அடித்த லேசர் ஒளியால் தடுமாற்றத்துடன் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு ஏர் ஏசியா விமானம் திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானத்தை தரையிறங்க விமானி முயற்சி செய்தார். அப்போது ஓடுதளத்தின் கிழக்கு திசையிலிருந்து லேசர் ஒலி வீசியதாக கூறப்படுகிறது.

ஓடுதளத்துக்கு எதிர் திசையில் உள்ள நத்தமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர் லேசர் ஒலி விளக்கை விமானத்தில் மீது அடித்துள்ளார். இதனால் விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முடியாமல் சிறிது நேரம் விமானி தடுமாறினார்.

பின்னர் விமானி லேசர் ஒலி விளக்கை அடிக்கபட்டத்து குறித்து ஏர் ஏசியா விமான நிறுவனத்திடமும் திருச்சி பிரிவு அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதன் பேரில் போலீசார் விமானத்தின் மீது லேசர் ஒளியை அடித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

plane landed with a glitch at the Trichy airport due to a laser beam fired by a mysterious person


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->