கால்வாயில் கிடந்த பிளாஸ்டிக் பார்சல்.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு-விருகம்பாக்கம் சாலைக்கு அருகில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் கிடந்துள்ளது. அதன் அருகில் தூய்மை பணியாளர்கள் சென்று பார்த்த போது, அது ஒரு பிணம் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 அப்பகுதியில் காளியம்மன் கோவில் தெருவில் பெரிய கழிவுநீர் கால்வாய் ஒன்று ஓடுகிறது. இதை சுற்றி நிறைய குடியிருப்புகள் இருக்கின்றன. சனிக்கிழமை காலை 7 மணியளவில் தூய்மை பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் ஒரு உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓடியுள்ளனர்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து சென்று பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், அவருக்கு 60 வயது இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அவரது உடலில் நிறைய வெட்டு காயங்கள் இருக்கின்றன. பின்னர், விசாரணை மேற்கொண்டதில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் வயது 67 என்பது தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரிய வராத நிலையில், தனி படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்று வட்டார பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plastic Parcel with Dead Body In Chennai Virugambakkam Road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->