செங்களால் வந்த வினை.... பொலந்து கட்டிய பொதுமக்கள்..... - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள நகைக் கடையில் பணக்கட்டுகளைப் போல செங்கலைப் பையில் சுற்றி எடுத்துச் சென்று நாடகமாடிய நபரைப் பொதுமக்கள் பொலந்து கட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மக்களின் நடமாட்டம் மிகுந்து காணப்படும் காந்தி சாலையில் உள்ள தங்கநகைக் கடையில் இளைஞர் ஒருவர் நகைகள் வாங்குவதாகக் கூறி, இந்தப் பையில் பணகட்டுகள் இருப்பதாகக் கூறி இருக்கையின் மீது வைத்தார்.

பின்னர் நகைக்கடை ஊழியர்கள் அவருக்குத் தேவையான நகைகளைக் காண்பிக்கும் பொழுது, திடீரென்று நகைகளை எல்லாம் வாரிக் கொண்டு கடையை விட்டு வெளியே தப்பி ஓடி உள்ளார். பிறகு அப்பகுதியைச் சுற்றி வணிகர்கள் இருப்பதனால், அவர்களின் உதவியினால் அத்திருடன் கையும் கழுவுமாகப் பொதுமக்களிடம் சிக்கினான்.

பின்னர்ப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ராணிப்பேட்டைக் கே கே நகர் அம்பேத்கர்த் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், ஆற்காட்டில் காய்கறி மார்க்கெட்டில் லோட் மேனாக வேலைப் பார்த்து வருகிறார் என்று தெரியவந்தது.

கடையில் நடந்தது என்ன?

தினேஷ்குமார்க் கடைக்கு முதலில் மஞ்சள் நிற பையுடன் 5 லட்சம் ரூபாய் பணம் உள்ளது, அதற்கு நகைகள் காட்டுங்கள் எனவும் கேட்டுள்ளார். அந்தப் பணப்பையை பொறுப்பே இல்லாமல் இருக்கையில் வைத்துவிட்டு நகைப் பார்ப்பதில் குறியாக இருந்தாதல், வியாபாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இளைஞரிடம் தங்க நகைகளைக் காட்டாமல் கவரிங் நகைகளைக் காட்டியுள்ளனார் வியாபாரிகள். அதில் ஆரம், நெக்லஸ் என ஐந்தாயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகளை ஒரிஜினல் நகைகள் என நினைத்து, வாரிக் கொண்டு வெளியே ஓடும் போது தான் பொதுமக்களிடம் சிக்கியதாகக் கூறியுள்ளார். அந்த மஞ்சப் பையில் என்னதான் இருக்கிறது என்று திறந்து பார்த்தா... அது பணப்பை அல்லச் செங்கல் பை என்று.....

இதனை அடுத்து தினேஷ்குமார் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பணத்துக்குப் பதில் செங்கலை வைத்து நாடகமாடிய ஏமாற்றிய தினேஷ் குமாரைத் தங்க நகைகள் என்று கவரிங் நகைகளைக் காட்டி ட்விஸ்ட் கொடுத்துள்ளார் நகை வியாபாரிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

played with bricks instead of money


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->