அரசு பள்ளிகளை மேம்படுத்த காமராசரின் 122-ஆம் பிறந்த நாளில் உறுதியேற்போம் - மருத்துவர் அன்புமணி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசு பள்ளிகளை மேம்படுத்த காமராசரின் 122-ஆம் பிறந்த நாளில் உறுதியேற்போம் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முன்னாள் தமிழக முதலமைச்சரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான காமராஜர் பிறந்தநாள். அவரது 122 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று.  தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான்.

தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்  இலவசக் கல்வி  வழங்கியது  மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

ஆனால், தமிழ்நாட்டில் இன்று அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி அரசு பள்ளிகளை அனைவரும் தேடி வந்து கற்கும் கல்விக் கோயில்களாக மாற்றுவதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pledge to improve government schools on Kamarajar 122nd birthday by Doctor Anbumani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->