கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர்! பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அதன்படி இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு தியானம் செய்வதற்காக இன்று சென்றுள்ளார். 

இதற்காக அவர் விமான மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். முதலில் அங்கு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். 

பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் பிரதமர் மோடி விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு இன்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்கி 3 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து தியானம் செய்ய உள்ளார். 

இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தியானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் , திமுக போன்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi arrived Kanyakumari


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->