தயார் நிலையில் ராமேஸ்வரம் - பாம்பன் வருகிறார் பிரதமர் மோடி.!!
pm modi come in rameshwaram for open pamban new railway bridge
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் விதமாக கடந்த 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரெயில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழந்துள்ளது.
இந்த நிலையில், பாம்பன் பகுதியில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் முடிவடைந்ததனைத் தொடர்ந்து, சோதனை ஓட்டம் நடைபெற்று போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வருகிறார்.
காலை 11.45 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் செல்ல இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவை அனைத்தையும் பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி, பகல் 12.25 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
English Summary
pm modi come in rameshwaram for open pamban new railway bridge