பிரதமர் மோடி தமிழகம் வருகை.. எதற்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் 150 நகரங்களை வந்தே பாரத் ரயில் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தாம்பரம் - செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியபள்ளம் இடியை என ரயில் சேவை திட்டத்திற்கு ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi comes to tamilnadu on April 8


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->