தமிழகம் வரும் பிரதமர் மோடி! இதுதான் காரணமா?!  - Seithipunal
Seithipunal



ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு ணையத்திலிருந்துதான், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவதால், பல நாடுகளும் இஸ்ரோ வாயிலாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.

இதன் காரணமாக மேலும் ஒரு  ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் குலசேகரபட்டினம் அருகில் 2,230 ஏக்கரில் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.

இந்த ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினம் வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் முன்பே, தற்காலிக ஏவுதளம் ஒன்றை அமைத்து சிறிய ரக, குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவும் வகையில் பணிகள் நடந்துவருகிறது. பிரதமர் மோடி அடிகள் நாட்டும் போது இந்த ஏவுகணை செலுத்தவும் தயாராகி வருகிறது இஸ்ரோ. 

மேலும், ராமேசுவரத்தில் பாம்பன் இடையே புதிய ரெயில்வே தூக்கு பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும், ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi ISRO Tamilnadu visit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->