தர்மபுரியில் 3 ஏரிகளை இணைக்கும் திட்டத்தை துவக்கி வைத்த அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Dharmapuri Lake Connect
தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி ஜம்பேரி ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியிலிருந்து கோவிலூர் சென்றாயன அள்ளி ஏரிக்கும், சென்றாயன அள்ளி ஏரியிலிருந்து தொன்னயன அள்ளி ஏரி வரை 200 MM HDPE பைப்லைன் அமைத்து, ஏரிகளில் நீரேற்று மூலம் நீரை நிரப்பி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டம் ஒன்றை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்திற்க்கு அன்புமணி இராமதாஸின் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து ரூ 18.10 லட்சம் ஒதுக்கீடு செய்து இருந்தார்.
இந்நிலையில், இன்று தருமபுரி வந்த அன்புமணி இராமதாஸ் நேரடியாகவே சென்று திட்டத்தை தொடக்கி துவக்கி உள்ளார்.

பொதுவாக தமிழகத்தை சேர்ந்த எம்பி-க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் நிதியை பேருந்து நிழற்குடை கட்டுவதில் தான் செலவிடுவார்கள்.
அதிலும் 4 பைப், 2 தகரம், 50 டைல்ஸ், 4 இருக்கை மட்டுமே வைத்த அந்த நிழற்குடைக்கு 5 லட்சம் கணக்கு கட்டிய எம்பி ஒருவரும் இருக்கிறார்.
ஆனால், அன்புமணி இராமதாஸ் விவசாயிகளுக்கு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து ரூ 18.10 லட்சம் மதிப்பீட்டில் 200 MM HDPE பைப்லைன் அமைத்து, ஏரிகளில் நீரேற்று மூலம் நீரை நிரப்பி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டத்தை துவக்கி வைத்து இருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

English Summary
PMK Anbumani Ramadoss Dharmapuri Lake Connect