பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் - அன்புமணி இராமதாஸ் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப்  பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மேலும், மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்து செய்தியில், "பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63  ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதன் மூலம்  கடந்த 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். உலக அளவிலான போட்டிகளில் மேலும், மேலும் சாதனைகளை படைக்க மாரியப்பனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் வாழ்த்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Wish Mariyappan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->