நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி! முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தகவல்.!
PMK will lead party alliance in Parliament election
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என ஏ.கே.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாமக சார்பில் பல்லாவரம், தாம்பரம் தொகுதிகளுக்கான புதிய பொறுபாளர்கள் தேர்வு கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜே.எம்.சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சிறபு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பா.ம.க.வில் சேர்வதற்கும், பொறுப்புகளை பெறுவதற்கும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், இந்த இரண்டு தொகுதிகளிலும் பொறுப்புகளை பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிக அளவில் பா.ம.க.வில் கட்சி பொறுப்புகளில் சேர அதிகமானோர் முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சி பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
English Summary
PMK will lead party alliance in Parliament election