தேர்வறையில் மாணவிகளிடம் சில்மிஷம் - அறைக்கண்காணிப்பாளர் போக்ஸோவில் கைது.!
pocso case file on teacher for harassment in
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.
அப்போது, ஒரு வகுப்பறையில் 6 மாணவிகள், 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் தேர்வினை எழுதிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் கண்காணிப்பாளராக தனியார் பள்ளியின் ஆசிரியர் சம்பத்குமார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர், மாணவிகள் காப்பி அடிக்கிறார்களா..? பிட் ஏதேனும் வைத்திருக்கிறார்களா..? என்று சோதனை செய்வதுபோல், 6 மாணவிகளிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், மாணவிகள் அமைதியாக தேர்வில் மட்டும் கவனம் செலுத்தி எழுதி முடித்துவிட்டு, அவசர அவசரமாக தேர்வு அறையை விட்டு வெளி ஏறினர். பின்னர் வகுப்பறையில் நடந்தவற்றை தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் படி, ஆசிரியர் சம்பத்குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pocso case file on teacher for harassment in