திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று... தாயும் தற்கொலை முயற்சி.!
Poisoning 2 children and killing them mother also attempted suicide in Tirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ஜமுனா (33). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமுனா கடந்த மூன்று வருடங்களாக பெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து ஜமுனா, தாய் வீட்டில் தங்கியிருப்பது தொடர்பாக குடும்பத்தாரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த ஜமுனா தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, ஜமுனாவும் விஷம் குடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜமுனாவின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு குழந்தைகள் மற்றும் ஜமுனா மயங்கி கிடந்துள்ளனர். மேலும் அருகில் விஷ பாட்டில் மற்றும் குளிர்பானம் கிடந்துள்ளது.
இதையடுத்து இரண்டு குழந்தைகள் மற்றும் ஜமுனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்து மருத்துவர் இரண்டு குழந்தைகளும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜமுனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Poisoning 2 children and killing them mother also attempted suicide in Tirupattur