கள்ளசாராய விவகாரம்: சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு.!
poisonous liquor issue CM Stalin speech
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் ச்சி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கிய போது கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக, பாமக வெளியிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அமளில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்எல்ஏ காலை காவலர்கள் வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளசாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
அதிமுகவினர் திட்டமிட்டு பேரவை விதிகளுக்கும் மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அமளில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு இன்று ஒரு நாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
எதிர்கட்சியினர் பேச வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சபாநாயகர் அதிமுகவினரை அவைக்குள் வர அனுமதி அளித்துள்ளார்.
English Summary
poisonous liquor issue CM Stalin speech