ஹிஜாவு மோசடி வழக்கு.. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்..!! காவல்துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு மாதம் 15% வட்டி தருவதாக கூறி பொய்யான வாக்குறுதி அளித்து 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.4,400 கோடி வரை வசூல் செய்தும் அதன்பின்பு முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.

இந்த வழக்கில் ஏற்கனவே ஹிஜாவு நிறுவனத்தின் தலைவர் சௌந்தரராஜன், இயக்குநர்கள் நேரு, செல்வம், சுரேஷ், சந்திரசேகரம் பிரிஸிட்லா, கமிட்டி மெம்பர்களான குருமணிகண்டன், முகம்மது ஷெரீப், சாந்தி பாலமுருகன், கல்யாணி, பாரதிரவிச்சந்திரன், சுஜாதா பாலாஜி மற்றும் ஹிஜாவு தலைமையலுவலகத்தின் பொதுமேலாளர் சுஜாதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு இயக்குநரான கலைச்செல்வி மற்றும் அவரது கணவரும் ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும் மேலாண் இயக்குநருக்கு நெருக்கமான ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர்.

ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டே ஹிஜாவு நிறுவனத்தில் இணைந்து பன்னாட்டு நிறுவனமாக மாற்றி அதன் மூலம் அதிக முதவீடுகளை திரட்ட மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், தலைவர் சௌந்தரராஜன் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இவர் தனது பெயரில் ஆர்.எம்.கே ப்ரோஸ் என்ற பெயரில் துணை நிறுவனம், சென்னை அண்ணாநகர் மேற்கில் ஆரம்பித்து ரூ.300 கோடி வரை முதலீடுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஹிஜாவு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவரை தவிர இந்த வழக்கில் பல நபர்கள் தலைமறைவாக உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஹிஜாவு மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் 15 பேரின் புகைப்படங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர். 

அவர்களில் அலெக்சாண்டர், மகாலட்சுமி, இனியா, கோவிந்தராஜுலு, சுஜாதா காந்தா, ரமேஷ், சுரேந்திர குமார், முத்துக்குமரன், முரளிதரன், சாமி சேகர் என்ற காலிப் சேகர், ராம்ராஜ், ஜெயக்குமார், ஜெயசாந்தலு, துரைராஜ், ப்ரீதா ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் 044 2250432 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police announced reward for info absconding criminal in hijau case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->