ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவுநாள்! சென்னையில் தீவிர கண்காணிப்பில் காவல்துறை!
Police are actively tracking the main raiders
சென்னை புளியந்தோப்பில் ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் போலீசார் தீவிரமாக முக்கிய ரவுடிகளை கண்காணித்து வருகின்றனர்.
சென்னை புளியதோப்பை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பட்டினம்பாக்கம் லூப் சாலையில் மீன் சாப்பிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அரக்கோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் நெல்லை கூலிபடையினர் சேர்ந்த ரவுடிகள் மொத்தம் 13 பேர்கள் சேர்ந்து ஆற்காடு சுரேஷ் சரமாரியாக வெட்டிகொலை செய்தனர்.
இந்த கொலையாளிகளுக்கு முன்னாள் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உதவி செய்திருப்பதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதி ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழிவாங்கவே ஆஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு உடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
கடந்த மாதம் ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று அவரது ஆதரவாளர்கள் சென்னை பெரம்பலூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியில் அதிக அளவில் வசிப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Police are actively tracking the main raiders