சேலம் அருகே பயங்கரம்.! ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேர்..! போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ரவுடியை சரமாறியாக அரிவாளால் வெட்டிய மூன்று பேரை போலீசார் தீவிர தேடி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் பிரபு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனை உமாராணி கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ், நேற்றிரவு பிரபுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபுவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பிரபுவை அரிவாளால் வெட்டிய சுரேஷ் உட்பட மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ரவுடி பிரபுவை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police are investigating the three people who cut the rowdy in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->