விருதுநகரில் அதிர்ச்சி.! 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்..! போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஈஞ்சார் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அடிக்கடி சிறுமியை கேலி செய்து காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுமியை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவில்லை. இதையடுத்து சம்பவத்தன்று மாரிமுத்து சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்பொழுது சிறுமியை பலாத்காரம் செய்து விட்டதாகவும், தனக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணம் செய்து வைக்காவிட்டால் இரண்டு பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் இதுகுறித்து மகளிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are looking for the man who kidnapped and raped a 13 year old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->