அண்ணி குளிப்பதை வீடியோ எடுத்த மைத்துனர்.. சொந்த வீட்டிலேயே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


அண்ணி குளிக்கும் போது ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்து வருகிறது. பொதுவெளிகளில் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது போன்றே குடும்பத்தில் அவர்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர் ஆலையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த இளம்பெண் குளிப்பதை அவரது மைத்துனர் அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் இந்த வீடியோவை வைத்து மிரட்டி அவரை தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளம்பெண் மறுக்கவே அவரை கட்டையால் அடித்து விட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து உள்ளார். மேலும்,  வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியதால் அந்த இளம்பெண் செய்வதறியாது திகைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்ந்து மிரட்டியதால் இது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் வைத்து அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are searching for a young man who took a pornographic picture while his sister-in-law


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->