பள்ளி மாணவிக்கு நடந்த அவலம்! கர்ப்பமாக்கிய உதவி பேராசிரியர்...!!! கைது செய்த போலீசார்...!!!
police arrested assistant professor who got school girl pregnant
செங்கல்பட்டு படூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தகவல் தெரிய வந்தது. கருகலைப்பால் நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் காவலர்கள் இதன்தொடர்புடைய மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது அவர் மேலக்கோட்டையூரிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்னும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து தாழம்பூர் காவலருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தாழம்பூர் காவலர்கள் நேற்று மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், மாணவி படித்து வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும், நாமக்கல்லை சேர்ந்த 'ராஜேஷ்குமார்' ஆசை வார்த்தை தெரிவித்து அவரை கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.
மேலும், கடந்த மாதம் ராஜேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றதால், தனது கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் காவலர்கள் தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாணவியின் தந்தை தாழம்பூர் காவலில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தாழம்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
English Summary
police arrested assistant professor who got school girl pregnant