ஓடுனா.. விட்டுருவோமா...? போலீசார்..! மூதாட்டியை கூட விட்டு வைக்காத போதை ஆசாமிக்கு நடந்தது என்ன?
police arrested nagaraj for old woman harassement
சென்னையில் ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்ற வாலிபர் குடித்துவிட்டு போதையில் மூதாட்டியின் வீட்டில் நுழைந்துள்ளார்.

அதிகமான போதைத் தலைக்கேறியதால் அவர் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத மூதாட்டி நாகராஜின் பிடியிலிருந்து தப்ப முயன்றதால், போதை ஆசாமி நாகராஜ் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டிக்கு முகத்திலும் , கண்ணிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலும் மூதாட்டிக்கு உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து போதை ஆசாமி நாகராஜன் அங்கிருந்து ஓடிவிட்டார்.இந்நிலையில் இன்று காலையில் மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகத் தாயை மீட்டு அவர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மூதாட்டிக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றித் தகவல் கிடைத்ததும் ஜாம்பஜார் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தப்பி ஓடிய நாகராஜனைக் காவலர்கள் கைது செய்தனர். இது தொடர்பாகவும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police arrested nagaraj for old woman harassement