திருமதி ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு!
Police Case file against Pa Ranjith and Porkodi
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை வழக்கில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை கட்சியிலிருந்து அந்த அந்த கட்சிகள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், தற்போது வரை 23 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவே வெளியாகின்ற ஒவ்வொரு தகவலும் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அக்கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீளம் பண்பாட்டு மையமும் பங்கு எடுத்துக் கொண்டது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி, மாநில தலைவர் ஆனந்தன், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொற்கொடி உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Police Case file against Pa Ranjith and Porkodi