வலிமை பட ஸ்டைலில் போட்ட 'ஸ்கெட்ச்'... 3 சிறுவர்களை 'செக்' வைத்து தூக்கிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சினிமா படப்பாணியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்கள் வலிமை பட  பாணியில் பைக்கை திருடி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சென்னை குரோம்பேட்டை பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் திருட்டு வாகனங்களை பயன்படுத்தி ஜி எஸ் டி சாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டார்கள் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று சிறுவர்களையும் கைது செய்த போலீசார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

வலிமை படத்தில் வருவதைப் போல திட்டம் போட்டு பைக் திருடி திருட்டு பைக்கில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டால்  பிடிப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் மாஸ்டர் படத்தில் வருவது போல 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police catch the boys who plan to steal and escape like a movie scene


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->