கோவை அருகே பரபரப்பு!!! ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணமா? அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார்!!!
Police caught Coimbatore near Rs71 point 50 lakh hawala money
கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்தில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

அவ்வகையில், கோவை- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது,பேருந்தில் பயணித்த ஒருவரிடம் ரூ. 71.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஹவாலா பணத்தை கேரள காவலர்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, காவல்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் இந்தச் சம்பவத்திற்குப் பின்னல் இருப்பவர்களை பிடிப்போம் என உறுதியளித்துள்ளனர்.
English Summary
Police caught Coimbatore near Rs71 point 50 lakh hawala money