ரயிலில் இருந்து இறங்கும் போது தண்டவாளத்தில் விழுந்த காவலர்.. உடல் சிதறி பரிதாப பலி..!
Police Death in Train
ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த காவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் வேலு. இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். சம்பவதன்று, சென்னையில் இருந்து கோவை செல்லும் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் ரயில் நிலையம் அருகே வண்டி மெதுவாக செல்லும் போது இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்டவாளத்தில் விழுந்தார்.
இதில், ரயில் அவர் மீது ஏறி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.