அண்ணாமலை படத்துடன் ஆடு பலியிட்ட விவகாரம் - உய்ரநீதிமன்றத்தில் போலீசார் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததையடுத்து, சிலர் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் அதன் தலையை வெட்டி கொண்டாடினர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, "இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது.

போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை பலியிட்ட விவகாரத்தில் போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

அதாவது, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் முதல் கட்டமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை விளக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police explain Goat sacrifice with Annamalai film issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->