கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை.. இளம்பெண்ணிடம் விசாரணை..! - Seithipunal
Seithipunal


பிறந்து சில மணி நேரங்களே ஆன குழபந்தையை கால்வாயில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், மேல அங்கம் கிராமத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளம்பெண் ஒருவர் சாக்குபையில் பச்சிளம் குழந்தையை தூக்கி வந்து கால்வாயில் போட்டு விட்டு வந்தது தெரியவந்தது.

இந்த காட்சிகளை வைத்து அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடமும் அவரின் கணவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Investigation About The baby lying in the canal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->