சேலம் || ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஏரியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பூலவரி பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவர் அந்த பகுதியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக பெற்றோர் தேடிவந்தனர். இந்நிலையில் கலையரசனின் வாகனம் அங்குள்ள ஏரியின் அருகே நிற்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது.

 இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கலையரசனுடன் கார்த்திக் என்ற இளைஞர் இருந்தது தெரியவந்தது. கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் நேற்று மாலை ஏரியில் இறங்கிய போது நீரில் மூழ்கி விட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் இரவு 8 மணி அளவில் களையரசன் கடை தெருவில் நேரில் பார்த்ததாகவும் அதற்கு முன்பு அவர் உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியதாகவும் சிலர் தெரிவித்தனர்.

 கார்த்திக் தெரிவித்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கலையரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about youth death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->