கன்னியாகுமரியில் பரபரப்பு - இளம்பெண்ணை தாக்கிய பாஜக கவுன்சிலர் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பரபரப்பு - இளம்பெண்ணை தாக்கிய பாஜக கவுன்சிலர் - போலீசார் வலைவீச்சு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுபி மோள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. 

இதில், சுபி மோளுக்கு ஆதரவாக சரோஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்த மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பாஜக கவுன்சிலர் சவார்க்கர் உள்ளிட்டோர் சம்ப இடத்திற்கு வந்தயது பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், வாக்குவாதம் ஏற்பட்டு பாஜக கவுன்சிலர் சவார்க்கர் சரோஜாவை வயிற்றில் மிதித்து தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சரோஜா, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் சம்பவம் தொடர்பாக சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பாஜக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சவார்க்கர், மெது கும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் சபீர், சுபி மோள் உள்ளிட்டோர் மீது  வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் சுபி மோள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சரோஜா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், போலீசார் மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர். .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation of bjp counsilar attack woman in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->