முன்னாள் அமைச்சரின் ஹோலி கொண்டாட்டத்தில் நடனம் - காவலர் பணிமாற்றம்.!
police officer posting change for dance in ex minister holi function
நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பீகார் மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகார் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அந்தக் காவலர் நடனம் ஆட மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என்று அமைச்சர் மிரட்டியுள்ளார். இதையடுத்து காவலர் வேறு வழியில்லாமல் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் நடனம் ஆடிய காவலரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police officer posting change for dance in ex minister holi function