சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரிடம்  அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்கிறார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில்வே போலீசார் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா அரசு மருத்துவ கல்லூரி மைதானம் மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு துணையாக ஊர்க்காவல் படையினர் இணைந்து பல்வேறு பகுதிகளில்  சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police raid Tirupur Railway Station ahead of Independence Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->