வி.ஏ.ஓ படுகொலை.. ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர்.. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராமசுப்பிரமணியம், மாரிமுத்து ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ கிராம நிர்வாக அலுவலர் கொலை சம்பவத்திற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடந்தையாக இருந்ததாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த புகார் மனுவில் "கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொல்லப்படுவதற்கு முன்பாக மணல் கடத்தல் புகாருக்குள்ளான ராமசுப்பிரமணியம் முறப்பநாடு காவல் நிலையம் சென்று அங்குள்ள காவலர்களுக்கு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பிரான்சிஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் கூறியதால் ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்துள்ளனர்" என புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

மேலும் "இந்த கொலைக்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை தான் காரணம். தாமிரபரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பலுடன் போலீசார் கூட்டு வைத்துள்ளனர். எனவே முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால், உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ், சிறப்பு பிரிவு ஏட்டு மகாலிங்கம் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் கொலையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் புகார்கள் காவல் துறையினர் மீது எழுந்துள்ளதால் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police received Rs35 thousand bribe in vao murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->