கள்ளகாதலுடன் சென்ற பெண்.. குழந்தைகளுக்கு நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் நண்பருடன் திருமணமான பெண் தலைமறைவான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் வலைத்தளம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்போது அவருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த இளைஞர் ஒருவர் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை தனது ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனால், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அந்தப் பெண் புனேவிற்கு சென்றுள்ளார்.

மனைவி மற்றும் குழந்தைகள் காணாததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், புனே சென்ற அந்த இளம்பெண்ணின் குழந்தைகளை அந்த வாலிபர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

இதனால், வேறு ஒருவரின் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட குழந்தைகள் அவர் கொடுமைப்படுத்துவது கூறி கதறி அழுதுள்ளனர்.  இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் இளம்பெண் மற்றும் அவரது குழந்தைகளை மீட்டனர்.

 காவல்துறை வருவதை அறிந்த கள்ளக்காதல் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .ஆனால் அந்த இளம்பெண் தனது கணவருடன் செல்ல மறுத்து. அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் இருக்கும் அவரது கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Rescue the Children


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->