பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் சோதனை.! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் ஜெகநாதன், விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் படி நடத்தப்பட்ட விசாரணையில் ஜெகநாதன் அரசு நிதியை தவறாக பயன்படுத்தி, அவர் இயக்குநராக உள்ள பூட்டர் என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் உட்பட ஜெகநாதனுக்கு தொடர்புடைய ezhu இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

இதேபோல் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே உள்ள பதிவாளர் தங்கவேலின் வீடு, கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் சதீஷின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police ride in salem periyar university


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->