மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த மதுரை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி வினோத்தை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வினோத்தை மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்பொழுது வினோத் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக, மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வினோத்தை பிடிப்பதற்காக அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்பு காயமடைந்த வினோத்தை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police shot the rowdy in madurai mattuthavani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->