டி.டி.எப். வாசனுக்கு போலீசார் திடீர் சம்மன்! காரணம் என்ன?
Police summoned TTF Vasan
பிரபல யூடியூப் வரும் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கிய வருமான டி.டி.எப் வாசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்.
இதனை தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. கடந்த 15ஆம் தேதி மதுரை வண்டியூர் பகுதியில் கார் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக அவர் மீது மதுரை அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வாசல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசல் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். விசாரணையின் முடிவில் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கில் பிரிவு 308 ரத்து செய்யப்பட்டு 10 நாட்கள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் எனவும் உறுதிமொழி கடிதம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் காவல் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் அனுப்பியுள்ளனர்.
English Summary
Police summoned TTF Vasan