பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Pon Manikavel Bail Case Chennai HC Order
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக, ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில், பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்கினால், விசாரணைக்கு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு பொன்மாணிக்கவேல் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதம் வைத்தார்.
இதற்க்கு சிபிஐ தரப்பில், வழக்கை நாங்களாக விசாரணை செய்யவில்லை, உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் விசாரணை செய்வதாக வாதம் வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
English Summary
Pon Manikavel Bail Case Chennai HC Order