பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறு..ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் உள்ளது இலந்தை கிராமம்.  இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அதே கிராமத்தைச் சார்ந்த சிவானந்தம் என்பவர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஒலிபெருக்கியில் பேசியுள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், கருப்பசாமி, கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் ஒலிபெருக்கியில் பேசக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவானந்தம் தரப்பினர், கருப்புசாமி மற்றும் அருண்குமார் ஆகியோர் வீட்டிற்கு செல்லும்போது அவர்களை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருண்குமார் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இலந்தைகுளத்தை சேர்ந்த சிவா, கண்ணன், சிவானந்தம் ராஜ்குமார், சரத்குமார் ஆகிய 5 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal competition fight between two groups


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->