பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது தெரியுமா? தேதியை குறித்த தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை அட்டை, பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர மற்ற அட்டைதார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. 


இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் ஜன.13 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பினை ஜனவரி 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பைப் பெற முடியாதவர்கள் ஜனவரி 14ம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கிவைப்பர் என எதிர்பார்க்க படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal gift issues from Jan10th to 13th at ration shops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->