பொன்முடிக்கு ஆதரவாக அமையுமா தீர்ப்பு? - பதட்டத்தை உச்சியில் பொன்முடி.!
ponmudi case hearing today
தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவர் மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்தவழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி தரப்பு வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளது உறுதியாகி உள்ளது என கருத்து தெரிவித்ததுடன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
சிறை தண்டனை பெற்றதால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக இழந்தார். இதனையடுத்து பொன்முடி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு, அதன்பிறகே தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த வழக்கை மார்ச் 4ஆம் தேதியான இன்றைக்கும் ஒத்திவைத்தனர். அதன் படி இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
English Summary
ponmudi case hearing today