பொன்முடி வழக்கு: மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.!
Ponmudi case One more false testimony
விழுப்புரம், வானூர் அடுத்துள்ள பூத்துறை பகுதியில் செம்மண் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு பெருமளவில் இழப்பீடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்பட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் இதுவரை 16 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பிறழ் சாட்சியம் அளித்தார்.
மேலும் அவர், டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ponmudi case One more false testimony