ஏழை குழந்தைகளும் மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்குவது நீட் தேர்வு - அண்ணாமலை!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5:20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். 

இந்தநிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளப்பக்கத்தில் அறிக்கை வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது, இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள், வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poor children NEET Exam give medical education opportunity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->