பூதமங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா.. பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்!  - Seithipunal
Seithipunal


பூதமங்கலம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ரத பிரமோற்சவம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராத்தில் பிரசித்தி பெற்ற அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ  பெருமாள் கோவிலில் ரத பிரமோற்சவம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்

 அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்து முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது பின்னர் பொது மக்களின் பங்களிப்போடு தேர் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

இந்த நிலையில் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த13 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 7ஆம் நாளான இன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது ஆண்டாக ரத உற்சவம் திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது.முன்னதாக அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் தேரில் அமர்த்தப்பட்டு தேர் திருவிழாவானது நடைபெற்றது. 

இந்த தேரோட்டமானது பூதமங்கலம் முக்கிய மாடவீதியில் வளம் வந்தனர். இந்த தேர் திருவிழாவில் பூதமங்கலம் சுற்றியுள்ள வேடந்தவாடி,  மன்சூராபாத், அவலூர்பேட்டை, ஆர்ப்பாக்கம் மங்கலம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poothamangalam Adikesava Perumal Temple Car Festival The devotees dragged the chariot with devotional ecstasy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->